UPDATED : அக் 11, 2026 08:20 PM
ADDED : அக் 11, 2026 08:06 PM
கார் மோதி பெண் பலி
சிறுமுகை அருகே, ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா, 50. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். சாலையில் மணிகண்டன் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அமுதா மீது மோதியதில், படுகாயமடைந்தார். இவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடிய வாகனம் மீட்பு
மேட்டுப்பாளையம் குமாரபுரத்தை சேர்ந்த முத்து, 65. இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றவர், மீண்டும் வந்து பார்த்த போது மாயமாகியுள்ளது. புகாரில், மேட்டுப்பாளையம் போலீசாரின் விசாரணையில், மேட்டுப்பாளையம் பாரத் பவன் ரோடு, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரசாந்த், 26 திருடியது தெரியவந்தது. இவரை கைது செய்து, வாகனத்தை மீட்டனர்.
போதை வஸ்துகள் பறிமுதல்
ஊட்டி பிரதான சாலை, பெட்ரோல் பங்க் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்குள்ள பூக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. மேட்டுப்பாளையம், மஜித் தெருவை சேர்ந்த இப்ராஹிம், 41 கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் எடை சுமார் 5 கிலோ.
