தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திருக்கல்யாணம் உற்சவம்

திருக்கல்யாணம் உற்சவம்

திருக்கல்யாணம் உற்சவம்


UPDATED : அக் 11, 2026 08:27 PM

ADDED : அக் 11, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:27 PM ADDED : அக் 11, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: குன்னத்துார்புதுாரில், 150 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர, நாராயண மூர்த்தி பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமை விழா நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதர, நாராயணமூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்கும், அபிஷேக பூஜை நடந்தது.

குருக்கம்பாளையம், மாகாளியம்மன் குழுவின் பஜனை மற்றும் நடனம் நடந்தது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, நாராயண மூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து அருள் பாலித்தார்.

இரவு, இடிகரை பள்ளிகொண்ட அரங்கநாதர் குழுவின் பஜனை நடந்தது. தாசபளஞ்சிக இளைஞர் மற்றும் மாதர் சங்கம் சார்பில், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, ராமானுஜ பக்த ஜன சபையினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us