தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


UPDATED : அக் 13, 2026 07:04 PM

ADDED : அக் 13, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:04 PM ADDED : அக் 13, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து

கெம்பட்டி காலனி, 5வது தெருவை சேர்ந்தவர் முருகன்,55; தச்சு தொழிலாளி. ராம்நகரிலுள்ள தனது உறவினருக்கு தெரிந்த செல்லையா என்பவரை சந்தித்து வேலை கேட்க சென்றார். வேலை எதுவும் இல்லை என்று செல்லையா கூறியிருக்கிறார். இருவரும் குடிபோதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லையா பீர்பாட்டிலால் முருகன் தலையில் அடித்ததில் ரத்தம் கொட்டியது. புகாரின் பேரில் செல்லையா கைது செய்யப்பட்டார்.

டிரைவரை தாக்கிய இருவர் கைது

ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்,36; டிரைவர். திருமணமாகி மனைவியை பிரிந்த இவர், புலியகுளத்தில் நண்பர் விஷ்ணு அறையில் தங்கியிருக்கிறார். மனோஜ்குமார், இவரது நண்பர் கணேசபுரம் தங்கராஜ், விஷ்ணு சேர்ந்து மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது. விஷ்ணு தலையில் பீர்பாட்டிலால் அடித்து காயப்படுத்தினர். புகாரின் பேரில், மனோஜ்குமார், தங்கராஜ் கைது செய்யப்பட்டனர்.

ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி

கவுண்டம்பாளையம், வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி,61. நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் செல்வபுரம், பேரூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். நிலைதடுமாறி சென்டர் மீடியனில் ஸ்கூட்டர் மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த அடி பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை விற்ற 3 பேர் மீது வழக்கு

பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்களை பிடிக்க, சரவணம்பட்டி போலீசார் சோதனை நடத்தினர். சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் கோகுல்,26, ரத்தினபுரி, கண்ணப்பன் நகர் பாலா,23 நடத்திய பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதே போல, பா.நா.பாளையத்தில் பெட்டிக்கடையில் புகையிலை விற்ற பாண்டியன், 43 மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 5 கிலோ புகையிலைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்றவர் கைது

சரவணம்பட்டி போலீசார் ரோந்து சென்ற போது, அம்மன் மெஸ் பின்புறம் காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக பீகார், மங்காத்தா பகுதியை சேர்ந்த சோனுகுமார்,30, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாக்கில் மது விற்றவர் கைது

கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார், அம்மன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். பிளாக்கில் மது விற்ற புலியகுளம் அண்ணா நகர் ஜெயராஜ்,48, கைது செய்யப்பட்டார். 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us