ADDED : அக் 13, 2026 06:46 PM

வெற்றிப் பயணம் திட்டம் பேட்டி:-
சண்முகராஜ் (ஜவுளிக் கடை உரிமையாளர்)-
காரமடையில் சிறிய நிகழ்ச்சிகள் முதல் பெரிய நிகழ்ச்சிகள் வரை மக்கள் ஜவுளி எடுக்க வருவார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஜவுளி தொழில் கடும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இத்திட்டம் வந்ததில் இருந்து சிறிய நிகழ்ச்சிக்கு ஜவுளி எடுக்கக்கூட டவுனுக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சேலை, இரண்டு சேலை எடுக்கக்கூட டவுனுக்கு செல்கிறார்கள். வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.
விக்னேஷ் (காரமடை நகராட்சி பா.ஜ., கவுன்சிலர்)-
கவுன்சிலர் என்ற முறையில் இதை பதிவு செய்கிறேன். காரமடையில் உள்ள கால் டாக்சி, ஆட்டோ, தனியார் பஸ்கள் இத்திட்டத்தால் கடும் பாதிப்படைந்துள்ளது. அனைவருக்கும் பாதிப்பில்லாத வகையில் தான் அரசு திட்டங்களை கொண்டுவர வேண்டும். தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இதனால் வேலை பறிபோகும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புக்கு மாற்று என்ன உள்ளது என்று அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
