ADDED : அக் 16, 2026 10:19 PM
இளைஞர் மீது தாக்குதல்
சரவணம்பட்டி: ஈஷா கார்டன் நவீன் தனது உறவினர் அனிஷ் உடன், தனது வீட்டின் பின்புற சாலையில் பைக்கில் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் நின்றிருந்தனர். விசாரித்ததற்கு அவர்கள், ஆபாசமாக திட்டி, பிவிசி பைப், பாட்டில், மரக்கட்டைகளால் இருவரையும் தாக்கி கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் நவீனுக்கு வலது மணிக்கட்டு, தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
ரேஸ்கோர்ஸ்: போலீசார் ரோந்து பணியின் போது, அங்கிருந்த பெட்டிக்கடையை சோதனையிட்டனர். அதில், புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்து, புதுக்கோட்டை சங்கர் என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து, 38 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
*சரவணம்பட்டி: சரவணம்பட்டி – காளப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில், 265 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி சதீஷ், சின்னியம்பாளையத்தில் வசிக்கும் கும்பகோணம் போவாஸ் யோஸ்வா ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
