தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : அக் 19, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொலை வழக்கு; இருவர் கைது

சரவணம்பட்டி: சத்தி ரோடு, சரவணம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், நேற்று ஆண் சடலம் கிடந்தது. விசாரணையில் இறந்தவர், அதே பகுதியை சேர்ந்த கனகராஜ், 50; குடும்பத்தினர் அதே பகுதியில் வசித்தாலும், வீட்டுக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு கிடைத்த வேலையை செய்து வந்தார். மது போதையில், கனகராஜ் மற்றும் கூலி வேலை செய்யும் ராமநாதபுரம் மாவட்டம் மருதுபாண்டியன், குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கனகராஜை கட்டையால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். சரவணம்பட்டி போலீசார் மருதுபாண்டியன், குமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பைக்கில் வந்து நகை பறிப்பு

சரவணம்பட்டி: துடியலுார் சாலை, சின்னமேட்டுப்பாளையம் சந்திப்பில், நிஷாந்த் என்பவர் தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து வந்த இருவர் மனைவியின் 2 பவுன் தங்கநகையை பறித்து தப்பினர். நிஷாந்த் பைக்கில் துரத்தினார். பைக்கில் சென்ற கொள்ளையர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். ஒருவரை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். நகை நிஷாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை பறித்தவர்கள் திருப்பூரை சேர்ந்த அரவிந்த், விஜய் என்பதும், நகை திருடுவதற்காகவே கோவை வந்ததும் விசாரணையில் தெரிந்தது. தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடுகின்றனர்.

மதுக்கடையில் தகராறு ; ஒருவர் கைது

சாய்பாபாகாலனி: கோவில்மேடு டாஸ்மாக் மதுக்கடைக்கு போதையில் வந்த புகழேந்தி என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் அங்கு வந்த போலீசாரையும் பணிசெய்ய விடாமல் அங்குள்ள பொருட்களை சேதம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகழேந்தியை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் மர்ம மரணம்

சாய்பாபாகாலனி: சிவக்குமார் வீதியில் உள்ள பூங்காவில் ஒருவர் துாக்கில் தொங்குவதாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் இவர் பெயர் தேவிசங்கர், 48 என்பதும், அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வாரந்தோறும் வந்து செல்வதும் தெரியவந்தது. அதிக குடிப்பழக்கம் காரணமாக, மனைவியை கடந்த பத்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த இவரை அக்கா வீட்டிலும், குடிப்பதை கண்டித்துள்ளனர்; இதனால் மதுபோதையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்; பிரேத பரிசோதனையின் முடிவில் காரணம் தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us