ADDED : அக் 19, 2026 05:48 PM
புகையிலை பொருட்கள் விற்பனை
சரவணம்பட்டி: போலீசார் ரோந்து பணியின் போது சிவானந்தாபுரம் டாஸ்மாக் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த, கோவையில் வசிக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்தனர்.
சேவல் சண்டை; இருவர் கைது
சரவணம்பட்டி: அத்திப்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள காலி இடத்தில் இளைஞர்கள் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் சிலர் ஓட்டம் பிடித்தனர். இதில், கணபதி சதீஸ், ஆர்.எஸ்.தோட்டம் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து, 3 சேவல்கள், ரூ.3700 பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை
சிங்காநல்லுார்: இருகூர் தீபம் நகர் பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சோதனையில், 1.2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மது குடித்த வர்கள் மீது வழக்கு
கோவை: மாநகர போலீசார் ரோந்து பணியின் போது பொது இடத்தில் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக 9 வழக்குகள் பதிந்து, 10 பேரை கைது செய்தனர். இவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
