ADDED : அக் 27, 2026 08:53 PM
கொலை வழக்கு கைதி மீண்டும் கைது
கணபதி: கணபதி அருகேயுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்தி,26; டிரைவர். அதே பகுதியில் உள்ள விவேகானந்தா நகர் பிரதாப்,32, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளார். இந்த வழக்கில் கார்த்தி அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே பகுதிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கார்த்தி மது குடித்த போது, அங்கு சென்ற பிரதாப்புடன் தகராறு ஏற்பட்டது. பிரதாப், இவரது நண்பர் ஆவின் ஆகியோர் சேர்ந்து கார்த்தியை தாக்கினர். புகாரின் பேரில், பிரதாப் கைது செய்யப்பட்டார். ஆவினை தேடி வருகின்றனர்.
27 கிலோ புகையிலை பறிமுதல்
சரவணம்பட்டி: சரவணம்பட்டி போலீசார், சின்னவேடம்பட்டி– அஞ்சுகம்நகர் ரோட்டிலுள்ள பேக்கரி அருகிலுள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்றது தெரிந்தது. இது தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் கீர்த்திராஜா கைது செய்யப்பட்டார். அங்கிருந்து, 27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
