ADDED : நவ 07, 2026 03:15 PM
பேக்கரியை உடைத்து திருட்டு
பீளமேடு : சேரன் மாநகர் பார்த்திபன் பேக்கரி நடத்தி வருகிறார். 3ம் தேதி பேக்கரியை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பேக்கரி திறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலைப் பொருள் விற்ற மூவர் கைது
பீளமேடு : போலீசார் நேரு நகர் பகுதியில் பெட்டிகடையில் சோதனை நடத்தி, புகையிலைப் பொருட்கள் விற்றதாக புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலை சேர்ந்த ரோஹித், 20 என்பவரை கைது செய்தனர். 2 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* ரத்தினபுரி போலீசார் காந்திபுரம் பாலமுருகன், 42, சதீஸன், 57 ஆகியோரை புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்தனர்.
கஞ்சா விற்ற நான்கு பேர் கைது
கவுண்டம்பாளையம் : ரோந்து போலீசார் கவுண்டம்பாளையம் சிவன் கோயில் பின்புறம் உள்ள காலியிடத்தில் நின்றிருந்தவரிடம் சோதனையிட்டனர். அவர் கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த போஜமுனிராஜன், 19 எனத் தெரிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
