தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : நவ 12, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொலை முயற்சி; ஒருவர் கைதுஉக்கடம்: கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் பிரபு, 42.

கூலித்தொழிலாளி. இரு தினங்களுக்கு முன் அண்டை வீட்டை சேர்ந்த சிவராமன், 58, பிரபு இடையே தகராறு ஏற்பட்டது. சிவராமன், பிரபுவை தாக்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன் நின்று கொண்டிருந்து பிரபுவிடம் தகராறில் ஈடுபட்ட சிவராமன், இரும்பு கம்பியால் தாக்கினார். காயமடைந்த பிரபுவை அருகிலிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உக்கடம் போலீசார் சிவராமனை கைது செய்தனர்.==கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; இருவர் சிறையிலடைப்புபீளமேடு : சரவணம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ், 31. மண்டல அறிவியல் மையம் அருகே தள்ளுவண்டி டிபன் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த இருவர் புஷ்பராஜ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுக்கவே, மற்றொரு நபர் புஷ்பராஜ் சட்டை பையில் இருந்து ரூ.1500 ஐ பறித்தார். தொடர்ந்து அவரை தள்ளி விட்டு இருவரும் தப்பினர். பீளமேடு போலீசார் விசாரணையில், பணம் பறிப்பில் ஈடுபட்டது நீலாம்பூர் சசிகுமார், 21, சூலுார் சந்தோஷ், 20 எனத் தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.==கஞ்சா விற்பனை; இருவர் சிறையிலடைப்புபீளமேடு : ஆர்.ஜி.புதுாரில் பீளமேடு போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் நின்றிருந்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், சின்னியம்பாளையம், சாந்தகுமார், 22, சூலுார் பாரத், 22 எனத் தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா, 50 பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ==பொது இடங்களில் மது அருந்திய 37 பேர் கைதுகோவை : பொது இடங்களில் மது அருந்துபவர்கள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், நடத்தப்பட்ட சோதனையில் 35 வழக்குகளில், 37 பேரை கைது செய்தனர்.துடியலுார் போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை ஆவுடையார்கோயிலை சேர்ந்த மாணிக்கம், 50 என்பவரை கைது செய்தனர்.==புகையிலைப் பொருட்கள் விற்பனை; இருவர் கைதுசுந்தராபுரம் : ஈச்சனாரியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஈச்சனாரியில் தங்கியுள்ள திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த ஆறுமுகம், 36 புகையிலைப் பொருட்களை பதுக்கியது தெரிந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 8.256 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல், துடியலுார் போலீசார் நீலகிரி குன்னுாரை சேர்ந்த எபினேசர், 24 என்பவரை புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தற்காக கைது செய்தனர்.==

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us