UPDATED : நவ 12, 2026 07:36 PM
ADDED : நவ 12, 2026 07:32 PM
சிறுவர் கலைப் போட்டிகள்
லுலு ஹைப்பர் மார்க்கெட் சார்பில் லுலு சிறுவர்களுக்கான சில்ட்ரன்ஸ் ரிட்ரீட் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 5 முதல் 10 வயது வரையிலான சிறுவர்களுக்கு களிமண் கலை போட்டியும், 8 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கட்டுரை எழுதும் போட்டியும் நடத்தப்படுகின்றன.
ஏக்தா நடனத் திருவிழா
இடம்: லுலு ஹைப்பர் மார்க்கெட் தேதி: நவ.14: ஏக்தா நடனத் திருவிழா நடக்கிறது. இதில் தனிநபர், இரட்டையர், குழு மற்றும் பிற நடனக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இடம்: மகாத்மா காந்தி நினைவிடம், போடனூர்தேதி: நவ.15
குழந்தைகளின் இசை நிகழ்ச்சி
ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் குழந்தைகள் பங்கேற்கும் பக்தி இசை நிகழ்ச்சியான ‘கோரஸ் பார் எ காஸ்’ நடக்கிறது. குழந்தைகளுக்காக குழந்தைகளே வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி, ஆர்ட் ஆப் லிவிங் இலவச பள்ளிகள் திட்டத்திற்கு ஆதரவாக நடத்தப்படுகிறது.
இடம்: பாரதிய வித்யா பவன் அரங்கம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம்.தேதி: நவ.14
மிதிவண்டி போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடக்கின்றன. 13, 15 மற்றும் 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஓட்ட பந்தயம்
இடம்: நேரு விளையாட்டு அரங்கம்.தேதி: நவ.14: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓட்ட பந்தயம் நடக்கின்றன. 17 முதல் 25, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஓவியப் பயிலரங்கம்
இடம்: நேரு விளையாட்டு அரங்கம்.தேதி: நவ.15: தி ஹேபிச்சுவல் எக்ஸ்பீரியன்சஸ் சார்பில் பவுல் அண்ட் பிரஷ் எனும் செராமிக் ஓவியப் பயிலரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்பாளர்கள் தங்களுக்கான செராமிக் கிண்ணம் அல்லது குவளையில் விருப்பமான ஓவியங்களை வரைந்து வடிவமைக்கலாம்.
