UPDATED : செப் 07, 2026 10:23 PM
ADDED : செப் 07, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
ஆலாந்துறை: பட்டாளம்மன் கோவில் வீதி பட்டியம்மாளும் மகன் திருமூர்த்தியும் நேற்று காலை ரேஷன் கடைக்கு டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.
திடீரென்று பிரேக் போட்டதால், பின்னால் வந்த ஆட்டோ இவர்களின் வாகனம் மீது மோதியது. கீழே விழுந்த பட்டியம்மாள் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் டேனியல் கிங்ஸ்லின் மீது வழக்கு பதிவு செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
