தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜூன் 22, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மது விற்பனை; ஒன்பது பேர் கைது நேற்று முன்தினம் இரவு, காட்டூர், ஆர்.எஸ். புரம், சிங்காநல்லுார், சரவணம்பட்டி போலீசார் சோதனை நடத்தினர். இதில், பொது இடத்தில் மது அருந்துதல், மது விற்பனை பிரிவுகளின் கீழ் ஏழு வழக்குகள் பதிந்தனர். இருகூர் ராமகிருஷ்ணன், 29, கணபதி தீனதயாளன், 38, துடியலுார் அறிவு, 37, செல்வபுரம் வினோத் குமார், 31 காட்டூர் கண்ணன், 21 காட்டூர் சபரிஷ், 23 செல்வபுரம் முருகேசன், குருசாமி, 54 ரவிக்குமார், 46 ஆகிய ஒன்பது பேரை கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை; ஒருவர் கைது ரத்தினபுரி போலீசார் நாராயணசாமி லே அவுட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம் சோதனை நடத்தினர். அதில் விற்பனைக்காக, 90 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்து கைது செய்தனர்.

கார் திருட்டு; போலீசார் விசாரணை பீளமேடு தனியார்அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வாணி. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். கடந்த, 19ம் தேதி மாலை உறவினர் வீட்டுக்கு சென்று இரவு திரும்பினார். குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மாயமாகியிருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

அபார்ட்மென்டில் ரூ.10 லட்சம் கார் திருட்டு பீளமேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் காணாமல் போயிருந்தது. உரிமையாளர் நேற்று வாகனத்தை எடுக்கச் சென்ற போது, நிறுத்திய இடத்தில் கார் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தேடியும் கார் கிடைக்காததால், பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரு மர்ம நபர்கள் காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us