UPDATED : ஜூன் 28, 2026 04:12 PM
ADDED : ஜூன் 28, 2026 04:10 PM
ரத்தினபுரி: ரத்தினபுரியை சேர்ந்த ஜெயராம், 74 காந்திபுரம் நுாறடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் சாலையில் துாக்கி வீசப்பட்டார். தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பஸ் டிரைவர் கதிரேசன், 59 மீது வழக்கு பதிவு செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
போதைப்பொருள் விற்ற ஆறு பேர் மீது வழக்கு
மாநகர போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக குனியமுத்துார் முகமது காசீம், 55 லட்சுமி, 50 கார்த்திக், 25, ராஜபாண்டி, 20 சரவணக்குமார், 32, புதுக்கோட்டை சூர்யா, 27 பொன்வண்ணன், 33 ஆகியோரை கைது செய்தனர்.
