ADDED : ஜூலை 09, 2026 05:47 AM
விபத்தில் ஒருவர் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் சசிகுமார், 37. நேற்று மாலை காரில் பயணித்த போது, பெரியநாயக்கன்பாளையம் எல்.எம். டபிள்யூ., பிரிவு அருகே மேம்பாலத்தின் கீழ்பக்க தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதினார்.
சசிகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தவறி விழுந்தவர் பலி
சாமிசெட்டிபாளையம், அம்பேத்கர் நகரில் வசித்த தீபன்ராஜ், 27, பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகரில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார். மாடியில் பணியில் இருந்த போது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீபன்ராஜ் தாயார் பார்வதி, தகுந்த உபகரணங்கள் இல்லாமல், வேலை செய்ய சொன்ன குமார், ரவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
