UPDATED : ஜூலை 18, 2026 08:03 PM
ADDED : ஜூலை 18, 2026 07:43 PM
பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி யமுனா நகரில் வரிசையாக, 4 ஓட்டு வீடுகள் உள்ளன. நாகராஜ், என்பவர் வீட்டில் இரவு 10:30 மணிக்கு கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. சில வினாடிகளில் வீடு முழுக்க தீ பிடித்து அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியது. அனைவரும் அவசரமாக வெளியேறினர்.
சிறிது நேரத்தில் நாகராஜ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அருகே இருந்த வீடுகள் எரிந்து நாசமானது. ஒரு வீட்டில் பரிமளா என்பவர் 4 பவுன் நகையும், 50 ஆயிரம் ரொக்கமும் வைத்திருந்த பீரோ எரிந்து சாம்பலானது. துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
சரவணம்பட்டி: ரோந்து போலீஸ், கரட்டுமேடு பகுதியில், 3 பேரை பிடித்து, 2.35 கிலோ கஞ்சா, 3 செல்போனை கைப்பற்றினர். அவர்கள் அத்திபாளையம் இஷார், கண்டர்மில்ஸ் அப்துல்கலாம், பீளமேடு விஜயகுமார் என்று தெரிந்தது.
விளாங்குறிச்சி பெட்டி கடையில் புகையிலை விற்றதாக பீளமேடு போலீசார் சோதனை செய்து கேரளத்தின் ஹேமசுதன் என்பவரை கைது செய்தனர்.
