UPDATED : ஜூலை 18, 2026 08:03 PM
ADDED : ஜூலை 18, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கோவை:மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவைபாபு செல்வகுமார். தி.மு.க. அயலக அணி வடக்கு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்தார்.
அவர் தி.மு.க.விலிருந்து விலகியதாக அறிவித்தார்.
”கோவை தி.மு.க.வை கரூர் கம்பெனியாகவே செந்தில் பாலாஜி மாற்றி விட்டார். தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. கவுன்சிலராக இருக்கும் நானே பார்ட்டி பண்ட் கொடுத்தால் தான் வேலை நடக்கும். இதற்காக ஆபீஸ் போட்டு வசூலித்தனர்.
”திரும்பிய திசை எல்லாம் லஞ்சம் கேட்டதால் தி.மு.க. தோல்வி அடைந்தது. த.வெ.க. ஆட்சி வந்த பின் காசு கொடுக்காமலே வேலை நடக்கிறது. தி.மு.க.வில் இனி இளைஞர்களுக்கும் எளியவர்களுக்கும் இடமில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுகிறேன். சுயேச்சை கவுன்சிலராக மக்கள் பணியை தொடருவேன்” என்றார்.
