தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜூலை 25, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பீர் பாட்டில் அட்டாக் ஒருவர் கைது

தொண்டாமுத்தூர்: சுண்டப் பா ளையம் சக்திவேல், 45. ரியல் எஸ்டேட் ஏஜன்ட். டாஸ்மாக் கடையின் பின்புறம் உறவினரின் தோட்டத்தை அவர் பராமரித்து வருகிறார். வியாழன் இரவு, அந்த காலியிடத்தில் குளத்துப்பாளையம் முருகேசன் சிலருடன் மது அருந்தி கொண்டிருந்ததை பார்த்த சக்திவேல் கண்டித்தார்.

கடுப்பான முருகேசன், பீர் பாட்டிலால் சக்திவேலின் மண்டையை உடைத்துள்ளார். தொண்டாமுத்தூர் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

ஏர் ஹாரன் பறிமுதல் பைன் ரூ.2.60 லட்சம்



உக்கடம்: வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் இணைந்து உக்கடம் பஸ் ஸ்டாண்டில் சோதனை நடத்தினர். 23தனியார், 3 அரசு பஸ்களில்ஏர் ஹாரன், கண்கூசும் வண்ண விளக்குள் பறிமுதல் செய்யப்பட்டன. தலா ரூ.10 ஆயிரம் வீதம்ரூ.2.60 லட்சம்அபராதம் விதிக்கப்பட்டது.

--பெட்டி கடை பூட்டை உடைத்து திருட்டு

வடவள்ளி: மணிகண்டன், 31 சிறுவாணி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். காலையில் பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 6000 ரொக்கம், சிகரெட் பாக்கெட்ஸ் மாயமாகி இருந்தது. வடவள்ளி போலீசார் விசாரித்து அஸ்ஸாம் அன்வர் ஹூசேன், 45 என்பவரை கைது செய்தனர்.--

புகையிலை விற்பனை 4 வழக்கு பதிவு

பெரியகடை வீதி: உக்கடம் பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்ற கனிராஜனை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ரேஸ்கோர்ஸ்: ஆவாரம்பாளையம் சாலை மகாலட்சுமி பெட்டி கடையிலும், ரயில்வே ஸ்டேஷன் விநாயகர் கோவில் அருகிலும் புகையிலை விற்ற சிவகங்கை நவீன்ராஜ், 20 ராஜஸ்தான் கிருஷ்ணமலி, 32 கைது செய்யப்பட்டனர்.

சிங்காநல்லுார்: ராவத்துாரில் பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us