UPDATED : ஜூலை 29, 2026 03:26 PM
ADDED : ஜூலை 29, 2026 02:30 PM
காந்திபுரம்: கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சுந்தர்,44 குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல, போதை மாத்திரை விற்றதாக உக்கடம், என்.எச்.ரோட்டை சேர்ந்த அப்துல்ரகுமான்,32, கஞ்சா விற்றதாக ஈச்சனாரி, ஐயப்பா நகரை சேர்ந்த தமிழரசன்,26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் கழுத்தறுப்பு மாணவனுக்கு வலை
பாலத்துறை: குமிட்டிபதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ரேவதி, 26. இரவு வீட்டிலிருந்தார். அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவன் வந்து மொபைல்போன் கேட்டுள்ளார். ரேவதி தர மறுத்ததால், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்துள்ளார். ரேவதி சத்தமிடவும் அருகிலிருந்தோர் வந்தனர். சிறுவன் தப்பியோடினார். ரேவதியை மருத்துவமனையில் சேர்த்தனர். க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடுகின்றனர்.
