தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஆக 03, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

சுந்தராபுரம்: சுந்தராபுரம் அருகே வசிக்கும், 20 வயதான கல்லூரி மாணவி, நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் நடந்து சென்றார். இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டல் செய்து தப்பினார். அதுபோலவே, 21 வயதுள்ள மற்றொரு பெண்ணிடம் அதே நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியுள்ளார். இவ்விரு பெண்களின் புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அந்நபர் சுந்தராபுரம், முருகா நகரை சேர்ந்த உதயபாஸ்கரின் மகன் இசக்கி அருண், 23 என தெரிந்து கைது செய்தனர்.



மயங்கி விழுந்து விபத்து

கோவை: குனியமுத்துாரை சேர்ந்தவர் செல்வராஜ், 61. இவரது மனைவி, விஜயலட்சுமி, 51. பைக்கில் குட்செட் ரோட்டில் செல்லும்போது விஜயலட்சுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் சாய்ந்தார். கட்டுப்பாட்டை இழந்து இருவரும் விழுந்தனர். படுகாயமடைந்த விஜயலட்சுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

பஸ் மோதி இளைஞர் பலி

உப்பிலிபாளையம்: அவிநாசி ரோடு எல்.ஐ.சி., சந்திப்பில், இரவு அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், பைக்கில் ரோட்டை கடந்த தேனியை சேர்ந்த யுவசங்கர், 23 உயிரிழந்தார். அவருடன் சென்ற சரவணகுமார்,20 காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய, தாமஸ் வீதி பஸ் டிரைவர் அமிர்தராஜ், 36 மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ரோட்டை கடந்தவர் பலி பீளமேடு: பீளமேட்டை சேர்ந்த கண்டிமுத்து, 71 அவிநாசி ரோடு தனியார் கல்லுாரி முன் ரோட்டை கடந்தபோது பைக் மோதியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பைக்கை ஓட்டிய ஜி.என்.மில்ஸ் தீபக்ராஜ், 26 மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்தனர்.



கஞ்சா விற்ற இருவர் கைது

சாய்பாபா காலனி: தடாகம் ரோடு கோவில் மேடு டாஸ்மாக் மதுக்கடை அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, மேற்குவங்கம் ஹிலால், 41, உ.பி., செராஜிதீன் அன்சாரி, 45 ஆகியோரை சாய்பாபாகாலனி போலீசார் கைது செய்தனர். 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* துடியலுாரில் கஞ்சா பயன்படுத்தியதாக மணிகண்டன், 21, யுவராஜ், 22 ஆகியோரையும் துடியலுார் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல் மதுக்கரை: மதுக்கரையிலுள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட ஒருவரிடம் விசாரித்தனர். அவர் ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தை சேர்ந்த சித்தரஞ்சன் கடாத்யா, 32 என்பதும், நான்கு கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ரூ.10.15 கோடி மோசடி புகார் மீது வழக்கு பதிவு

கோவை: சிங்காநல்லுாரை சேர்ந்த தேவராஜ், மனைவி உஷா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் இளஞ்சியம் ஆகியோர் பழநி அருகே 66.67 ஏக்கரில் இயங்கி வந்த அரசு அனுமதி பெற்ற இரு கல்குவாரிகள், ஒரு கிரஷரை ரூ.28.90 கோடிக்கு கிணத்துக்கடவு தொழிலதிபர் நந்தகுமாருக்கு விற்க முடிவானது.

நந்தகுமார் முதற்கட்டமாக ரூ.15 லட்சமும், 2025 நவ.,ல் ரூ.10 கோடியும் வழங்கியுள்ளார். சொத்தை பதிவு செய்யாமல் தேவராஜ் குடும்பத்தினர் இழுத்தடித்தனர். பணம் தர மறுத்து மிரட்டியதாகவும், திட்டமிட்டு கூட்டுச்சதி செய்து மோசடி செய்ததாகவும் அளித்த புகாரின்படி, மாநகர குற்றப்பிரிவு போலீசார் தேவராஜ், உஷா, ஐஸ்வர்யா, இளஞ்சியம் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us