ADDED : ஆக 13, 2026 06:02 PM
நில தரகரிடம் துணிகர மோசடி
ரத்தினபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் துரைசிங். சோமையம்பாளையம் சின்னதுரை 27 சென்ட் நிலம் விற்க வந்தார். ரூ.7 லட்சத்துக்கு நிலத்தை வாங்க துரைசிங் சம்மதித்தார். அட்னான்ஸ் 3 லட்சம், பின்னர் 3 தவணைகளில் 4 லட்சம் கொடுத்தார். பத்திரம் பதிவு செய்யும் நாள் வந்தது. சின்னதுரை வரவில்லை. அசல் ஆவணம் காணாமல் போனதாக கூறி, 3 மாத அவகாசம் கேட்டார். அதன்படி வந்தார். பத்திரப்பதிவுக்காக சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கே மாரியப்பன் என்பவர் வந்தார். நிலம் எனக்கு சொந்தமானது என கூறி, பதிவு செய்ய ஆட்சேபம் தெரிவித்தார்.
துரைசிங் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். சின்னதுரையும் மாரியப்பனும் சேர்ந்து ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
--
சிலிண்டர் கசிவால் தீ விபத்து
ராமநாதபுரம் மகேஸ்வரி, வீட்டு வேலை செய்துவருகிறார். காலையில் டீ போட சமையல் அறைக்கு சென்றார். அடுப்பு பற்றவைத்ததும் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்தனர். மகேஸ்வரி, அவரது கணவர், 2 குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர். நால்வரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டது தீப்பிடிக்க காரணம் என்றனர்.
--
மரத்தில் மோதியவருக்கு அபராதம் (pix avlbl)
வெள்ளலூர் பேரூராட்சியின் 4வது வார்டு லட்சுமி நகரில் நேற்று மினி கன்டெய்னர் லாரி, சாலையோர வேப்ப மரத்தின் கிளையில் மோதியது. மரம் முறிந்தது. தகவல் கிடைத்து வருவாய் ஆய்வாளர் கஜலட்சுமி வந்து விசாரித்தார். உடைந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தார். லாரி டிரைவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
--
77 கிலோ புகையிலை பறிமுதல்
பீளமேடு போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில், கொடிசியா அருகிலுள்ள பேக்கரியில் சோதனை செய்தனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக புதுக்கோட்டை பாண்டியராஜன், அரவிந்த் 32 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 77 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ரேஸ்கோர்ஸ் போலீசார் சென்டரல் ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த 18 கிலோ புகையிலை பொருட்களை கைபற்றினர். கொண்டு வந்து வைத்தது யார் என விசாரிக்கின்றனர்.
கவுளி பிரவுன் சாலையில் 3 பேரை சோதனையிட்டனர். 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். அதையும் ஆட்டோ, மொபைல்போன், ரொக்கம் 1000 ரூபாயும் பறிமுதல் செய்தனர். அவர்கள் ராமநாதபுரம் பிரகாஷ், பாலுமித்ரன், சந்துரு 29 என்பது தெரிந்தது. இவர்களின் நெட்வொர்க் குறித்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் கஞ்சா விற்றதாக பீளமேடு சஞ்சய்குமார், சித்தாபுதுார் சரவணகுமார் ஆகியோரை கைது செய்தனர். 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
