UPDATED : ஆக 15, 2026 07:14 PM
ADDED : ஆக 15, 2026 05:41 PM
துடியலுார்: உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த சதிஸ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. அதில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆஜராகாததால், துடியலுார் போலீசார் புதிய வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
டிரைவர், கண்டக்டர் கைது
சரவணம்பட்டி : சரவணம்பட்டி- துடியலுார் ரோட்டில் வந்த இரு தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையே 'டைமிங்' பிரச்னையால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு தனியார் பஸ் டிரைவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த இளங்கோ, கண்டக்டர் நல்லாம்பாளையம் விக்னேஷ்வரன் மற்றொரு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தனர். அந்த பஸ் டிரைவர் ஈரோடு சரண் புகாரில், போலீசார் இளங்கோ, விக்னேஷ்வரனை கைது செய்தனர்.
துாங்கியவர்களிடம் போன், பணம் பறிப்பு
செல்வபுரம் : சொக்கம்புதுாரை சேர்ந்த தர்மலால் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, தலையணைக்கு அடியில் வைத்திருந்த மொபைல்போன், பையிலிருந்த பணம் காணாமல் போனது. புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ரூ.5,450 ரொக்கம் மற்றும் 2 போன்களை மீட்டனர்.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் பலி
பீளமேடு : எல்லைத்தோட்டம் ரோட்டை சேர்ந்த பெண் வேலுமணி. தனியாக வசித்து வந்தார். குடும்பத்தினர் அவரை பலமுறை தொடர் கொள்ள முயற்சித்தனர். அருகில் இருந்தவர்களை சென்று பார்க்க அறிவுறுத்தினர். உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றபோது, பெண் அங்கு இல்லை. வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கிடந்தார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
உக்கடம் : பெரியகடை வீதி போலீசார் ரோந்து சென்ற போது, புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டை அஸ்வின், திருப்பூர் விமல்குமார், ஆகியோரை கைது செய்தனர். 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரைகள் பறிமுதல்
குனியமுத்துார் : போலீசார் ஆகஸ்ட் 14 அன்று கோவைபுதுார், தொட்டராயன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை விசாரித்தனர். அவர் குனியமுத்தூர், காயிதே மில்லத் வீதியை சேர்ந்த சகாபுதீன், 26 என்பதும், விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா, போதைக்காக பயன்படுத்தும் டெபன்டடால் மாத்திரைகள், 750 வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
