ADDED : ஆக 31, 2026 07:51 PM
200 கிலோ புகையிலை
பொருட்கள் பறிமுதல்
சரவணம்பட்டி : போலீசார் ரோந்து பணியின் போது, நான்காவது வீதியில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியில் உள்ள அறைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, ஒரு வீட்டின் அறையில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து இருப்பது தெரிந்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் பார்த்திபன் என்ற நபர் அங்கு தங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. இதன் மதிப்பு, 79 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
பொது இடத்தில் மது
குடித்த 20 பேர் மீது வழக்கு
கோவை: மாநகர போலீசார் கடந்த இரண்டு நாட்கள் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பிரிவில் இரண்டு வழக்குகளின் கீழ், இருவரையும் , பொது இடத்தில் மது அருந்திய பிரிவின் கீழ் 14 வழக்குகளில் 18 பேர் என மொத்தம், 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
