UPDATED : செப் 05, 2026 07:29 PM
ADDED : செப் 05, 2026 06:22 PM
கோவை: கணபதியை சேர்ந்த தமிழரசன் மீது, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிந்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டார். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தவர், விசாரணைக்கு ஆஜராகவில்லை. சரவணம்பட்டி போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
* சாய்பாபாகாலனி ஸ்டேஷனில், 2016 செப்.,ல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் கைது செய்யப்பட்டு, கோர்ட் விசாரணைக்கு அனுப்பப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்பித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் கைது சிங்காநல்லுார்: பீளமேட்டை சேர்ந்தவர் பிஜித் விஸ்வம்; தனியார் நிறுவன ஊழியர். தனது நண்பரை பைக்கில் சென்று வழியனுப்பி விட்டு வந்தார். சவுரிபாளையம் டாஸ்மாக் மதுக்கடை எதிரில், 3 பேர் அவரை வழிமறித்து ஹெல்மெட்டால் தாக்கி தள்ளினர். கையில் இருந்த பீர்பாட்டிலால் தாக்கி தங்க மோதிரத்தை பறித்தனர். மிரட்டி யு.பி.ஐ., பரிவர்த்தனை மூலம் ரூ.22,100 அவர்களது கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர். சிங்காநல்லுார் போலீசார் மிதிலேஷ், கிருத்திக் பாலாஜி மற்றும் கோவிந்த் ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
உதவுவது போல் நகை திருட்டு வடவள்ளி: செல்வம் நகரை சேர்ந்தவர் பிரியா ராமகிருஷ்ணன். தனது வாடகை வீட்டை மாற்ற தொண்டாமுத்துார் சேகரை அழைத்தார். பொருட்களை மாற்றும் போது, 8 சவரன் உள்ள 2 பிரேஸ்லெட், வைர கம்மல் மாயமானது தெரிந்தது. புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.
