தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை சிறப்பு நிகழ்ச்சிகள்

கோவை சிறப்பு நிகழ்ச்சிகள்

கோவை சிறப்பு நிகழ்ச்சிகள்


UPDATED : செப் 05, 2026 10:10 PM

ADDED : செப் 05, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 10:10 PM ADDED : செப் 05, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மண்டல பூஜை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில், சவுரிபாளையம் தண்டபாணி சுவாமி கோயில், மற்றும் காந்திபுரம் லாலா கார்னரில் உள்ள சித்தி விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில், கும்பாபிஷேக விழா முடிந்து காலை 8 மணிக்கு மண்டல பூஜை நடந்து வருகிறது.

பிரதிஷ்டாபிஷேக விழா பூராமிகேடில் உள்ள ஹரி ஓம் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் புணராவர்தன கும்பாபிஷேக விழா மற்றும் தர்மலிங்கேஸ்வர சுவாமி பிரம்மாண்ட சிலை பிரதிஷ்டாபிஷேக விழா நடக்கிறது. காலை 5.30 மணிக்கு தீபாராதனை, யாத்ரா தானம், காலை 8.15 மஹா கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு தச தரிசனம், மஹா தீபாராதனை நடைபெறும்.

ஒலிம்பியன் சர்க்கஸ் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அரங்கில் சர்வதேச ஒலிம்பியன் சர்க்கஸ் நடக்கிறது. முழுமையாக குளிர்சாதன வசதி கொண்ட அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சர்வதேச கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகள், அசத்தலான அக்ரோபாட்டிக்ஸ், மேஜிக் மற்றும் குடும்பத்தினருக்கான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

கைத்தறி கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 41வது கைத்தறி துணிகளின் கண்காட்சி பீளமேட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. கண்காட்சியில் சேலைகள், வேஷ்டிகள், சுடிதார், ஆண்கள், பெண்களுக்கான பல கைத்தறி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் அனுமதி, வாகன நிறுத்தம் இலவசம்.

இலக்கியச் சந்திப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் இலக்கியச் சந்திப்பு நடக்கிறது. இதில் அய்யப்ப மாதவனின் 'கூந்தலில் செய்த துாரிகை' கவிதைத் தொகுப்பு மற்றும் ந.பெரியசாமி எழுதிய 'அகப்பிளவு' ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாமஸ் கிளப், சாந்தி திரையரங்கம் எதிரில், காலை 10.00 மணிக்கு நடக்கிறது.

தடகளப் போட்டி மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் 44-வது மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் நடை, ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் காலை 7.00 முதல் மாலை 5.00 மணி வரை நடக்கும்.

ஹாக்கி லீக் போட்டி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் ஆண்களுக்கான சி.டி.எச்.ஏ., சீனியர் ஹாக்கி லீக் போட்டி 2026 நடக்கிறது. சுகுணா டிராபிக்கான முதல் டிவிஷன் போட்டிகளும், ஜெயா பிரேமி அகாபே டிராபிக்கான இரண்டாம் டிவிஷன் போட்டிகளும் நடக்கின்றன. கார்ப்பரேஷன் ஆஸ்ட்ரோ டர்ப் மைதானம், ஆர்.எஸ்.புரத்தில் காலை 7.00 முதல் துவங்க உள்ளது.

தீபாவளி ஷாப்பிங் 'சிக்நேச்சர் ஈவென்ட்ஸ்' சார்பில் தீபாவளி ஷாப்பிங் விழா கொடிசியா வளாகம், ஹால் 'சி' யில் நடக்கிறது. இதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பொருட்கள் மற்றும் ஷாப்பிங் அரங்குகள் இடம்பெற உள்ளன. அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us