ADDED : செப் 09, 2026 07:21 PM
மோசடி நபர்களுக்கு வலை டாடாபாத்: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் பணிபுரியும் மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி. 7ம் தேதி ஆய்வுக்காக சின்னியம்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மின்வாரிய முத்திரையுடன் கூடிய போலி பணிநியமன ஆணையுடன் சிலர் பணியில் சேர வந்திருந்தனர். விசாரணையில் பணம் பெற்றுக்கொண்டு போலி பணிநியமன ஆணை வழங்கியது தெரிந்தது. பீளமேடு போலீசில் சாந்தநாயகி புகார் அளித்தார். போலீசார் மோசடி நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
பைக் திருட்டு; போலீசார் விசாரணை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரவு பணி முடித்த பயிற்சி டாக்டர் பவித்ரன், விடுதி முன் தனது பைக்கை நிறுத்தி சென்றார். மீண்டும் பணிக்கு செல்ல வந்தபோது, வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லை. புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டை காலி செய்ய மறுப்பு; பூட்டை உடைத்த உரிமையாளர் சிங்காநல்லுார்: உப்பிலிபாளையத்தில் ஒரு வீட்டில் 4 ஆண்டுகளாக சுதாகர் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு இருந்தார். அட்வான்ஸாக ரூ.1லட்சம், மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை. வீட்டின் உரிமையாளர் அருள்தாஸ், மனைவி சகிலா இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுதாகர் வெளியூர் சென்று திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் மாயமாகி இருந்தன. வீட்டை காலி செய்யாததால் உரிமையாளர்கள் கட்டில், பீரோ, ரூ.1 லட்சம், 8 பவுன் நகை, டி.வி., லேப்டாப் ஆகிய அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. சுதாகர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் பேட்டரி திருட்டு
ராமநாதபுரம்: சுங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரி அருகே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இவற்றில் இருந்து பேட்டரிகள் திருடப்படுவதாக டிரைவர்கள் புகார் அளித்து வந்தனர். இதை தடுக்க அவர்கள் இரவில் கண்காணித்து வந்தனர். அப்போது, பேட்டரி திருட முயன்ற இருவரை பிடித்து, ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கரும்புக்கடை மன்சார், சுங்கம் சாம் ஆமோஷ் என தெரிந்தது. போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
பள்ளி அருகே கஞ்சா விற்பனை
ஆக.17ம் தேதி, தனியார் பள்ளி செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக, குருபாலாஜி என்பவரை ஆர்.எஸ்.புரம் போலீசார் சிறையில் அடைத்தனர். போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்படி, அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
