தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரத்தசோகை தடுக்க சத்தான உணவு சாப்பிடுங்க! கல்லுாரியில் டாக்டர்கள்   அறிவுரை

ரத்தசோகை தடுக்க சத்தான உணவு சாப்பிடுங்க! கல்லுாரியில் டாக்டர்கள்   அறிவுரை

ரத்தசோகை தடுக்க சத்தான உணவு சாப்பிடுங்க! கல்லுாரியில் டாக்டர்கள்   அறிவுரை


ADDED : செப் 09, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: ரத்தசோகை ஏற்படுவதை தவிர்க்க சத்தான உணவை மாணவியர் சாப்பிட வேண்டும், என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர்கள் தெரிவித்தனர்.

வால்பாறை அரசு கலை அறியவில் கல்லுாரி, நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் ஷீலாபானு தலைமையில் நடந்தது. திட்ட அலுவலர்  பெரியசாமி வரவேற்றார்.

வால்பாறை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் நந்தினி பேசியதாவது:

மாணவியர் படிக்கும் வயதில், மிகவும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். எந்த சூழ்நிலையிலும் காலை உணவை தவிர்க்கக்கூடாது. சரியான நேரத்தில் துாங்கி, சரியான நேரத்தில் உணவு அருந்தினாலே நோய்கள் வர வாய்ப்பு இல்லை.

இரவு நீண்ட நேரம் கண்விழித்தல், சத்து இல்லாத உணவுகளை உட்கொள்வதாலும், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சத்தான உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டாலே ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு இல்லை. குறிப்பாக, பழம் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக யோகா பயிற்சி செய்வதன் வாயிலாக மனமும், உள்ளமும் அமைதியாக மாறும். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு, கூறினார்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையாளர்  சமிம்பானு, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ரூபா, உமாமகேஸ்வரி, சங்கர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us