ADDED : செப் 10, 2026 07:22 PM
பைக் திருட்டு காந்திபுரம்: 9வது வீதியை சேர்ந்தவர் ஜோசப். பஸ்சில் வந்த பார்சலை வாங்க பைக்கை பஸ் ஸ்டாண்ட் வெளியே நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல் சரவணம்பட்டி: எப்.சி.ஐ. குடோன் டாஸ்மாக் மதுக்கடை அருகே, போலீசார் ரோந்து சென்ற போது அங்கு நின்றிருந்தவரை சோதனையிட்டனர். அவரிடம் 25 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் சிவகங்கையை சேர்ந்த கண்ணன் எனத் தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது சாய்பாபா காலனி: மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சந்தேகப்படும் படி நின்றிருந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தினேஷ், முத்துலட்சுமி என்பதும். 250 கிராம் கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
