லாட்டரி விற்ற முதியவர் கைது
மேட்டுப்பாளையம் சாந்திநகர் பொதுகழிப்பிடம் அருகில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி, விற்பனை நடைபெறுவதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சேகர், 67, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 3 நம்பர் லாட்டரி மற்றும் ரூ.450 பணத்தை பறிமுதல் செய்தனர்.
----விபச்சாரம்: 2 பேர் கைது
மேட்டுப்பாளையம்  மார்க்கெட்டில் பணிபுரியும் 26 வயது இளைஞரின்  வாட்ஸ் அப்பிற்கு ஒரு பெண் போட்டோ வந்தது. அந்த எண்ணிற்கு அவர் போன் செய்தபோது, போட்டோவில் உள்ள பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம், குளத்துப்பாளையம் வரும்படி அழைத்துள்ளார்.
அங்கு சென்ற அந்த வாலிபரிடம் ஒரு பெண்ணை காண்பித்து ரூ.1,000 தரும்படி மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்த ரஞ்சித்குமார், 26, காரமடையை சேர்ந்த சசிக்குமார், 29, கேட்டுள்ளனர். இதையடுத்து, அந்த வாலிபர் அங்கிருந்து வெளியே வந்து, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்குமார், சசிக்குமாரை கைது செய்து, 2 அழகிகளை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
----

