/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரைம் செய்திகள்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
/
கிரைம் செய்திகள்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
கிரைம் செய்திகள்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
கிரைம் செய்திகள்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
ADDED : அக் 06, 2025 11:33 PM
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 40. தனியார் நிறுவன ஊழியர். நான்கு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீடு திரும்பினார்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஐந்து சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்தனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை பார்த்தபோது, சிவக்குமார் வீட்டுக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் தான் திருட்டு நடந்தது தெரிந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
மாயமான பெண்கள் குறித்து விசாரணை மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வனத்துறையினர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்தனர்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பெண்ணின் உடலை போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மாயமான பெண்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.---