/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைகட்டி பெருமாள் முடியில் குவிந்த பக்தர்கள்
/
ஆனைகட்டி பெருமாள் முடியில் குவிந்த பக்தர்கள்
ADDED : அக் 06, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;ஆனைகட்டி அருகே உள்ள பெருமாள் முடியில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் பெருமளவு குவிந்தனர்.
கோவை ஆனைகட்டி ரோட்டில் மலை மீது உள்ள சேம்புகரை கிராமத்துக்கு மேல் காப்பு காட்டு பகுதியில் பிரம்மாண்ட பாறை மேல் உள்ள சிகரத்தில் ரங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் முடி என அழைக்கப்படும், இக்கோவிலில் புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில், திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொள்வர். புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையான கடந்த, 4ம் தேதி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர்.