/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரைம் செய்திகள் மேட்டுப்பாளையம்
/
கிரைம் செய்திகள் மேட்டுப்பாளையம்
ADDED : ஏப் 27, 2025 09:17 PM

மனைவியை தாக்கிய கணவர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 38. கூலி தொழிலாளி. இவரது கணவர் பிரபாகரன், 38. இவருக்கு அதிக மதுப்பழக்கம் உள்ள காரணத்தினால், கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்னை வந்துள்ளது.
இதையடுத்து, கணவரை விட்டு மகாலட்சுமி பிரிந்து வந்து, மேட்டுப்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, தனியார் கடையில் வேலை செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அவரை தேடி வந்த பிரபாகரன், மேட்டுப்பாளையம் ஜங்ஷன் பகுதியில் வைத்து மகாலட்சுமியை, கெட்ட வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். இதனால் காயமடைந்த மகாலட்சுமி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்தனர்.
----------தண்ணீர் லாரி மோதி இருவர் பலி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, குப்பநத்தத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஞானசேகர், 26. தேனி மாவட்டம், செட்டிபட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் மாரிச்சாமி, 36. இருவரும் குன்னத்தூரில் உள்ள ஒயர் கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் குன்னத்தூரில் இருந்து கணேசபுரம் சென்றனர். பைக்கை ஞானசேகர் ஓட்டி சென்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் லாரி, பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டிச் சென்ற ஞானசேகரன், பின்னால் அமர்ந்து வந்த மாரிசாமி இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தனர். போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
450 கிலோ குட்கா பறிமுதல்
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பொகலூர் பகுதியில், சிறுமுகை போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குட்கா பொருட்களை கடத்தி வந்த, அன்னூர் கரியகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், 32, என்பவரை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.---

