திருவள்ளுவர் தினத்தில் மது விற்றவர்கள் கைது
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மது பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 108 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
--நடை பயிற்சி சென்றவர் விபத்தில் பலி
மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்தவர் மாணிக்கராஜ், 72. வயது முதிர்வின் காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
நடூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் காலையில் வழக்கம் போல் மாணிக்கராஜ், நடைபயிற்சி சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணிக்கராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
---