தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்


ADDED : பிப் 18, 2024 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2024 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது


கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 22. இவர் கோவில்பாளையம் போலீஸ் எல்லையில் வழிப்பறி மற்றும் கோவை மாநகர் பகுதியில், கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் வழிப்பறி வழக்கில் கோவில்பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், 'கோவை கலெக்டர் கிராந்தி குமார், சந்தோஷ் குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சந்தோஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் காரமடையில் சட்ட விரோதமாக கலப்பட மதுபானம் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடகாவை சேர்ந்த மோகன், 57, மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 53, ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையொட்டி கலெக்டர் உத்தரவின்பேரில், அவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

42 சவரன் திருட்டு


அன்னூர் அருகே சுக்கிரமணி கவுண்டன் புதுரை சேர்ந்தவர் துரைசாமி, 68. இவர் தபால் துறையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டு நாட்களுக்கு முன்பு, இவர் அருகில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அங்கு விவசாய பணிகளை பார்வையிட்டு, நேற்று முன் தினம் வீடு திரும்பினார். வீட்டில் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 42 சவரன் நகை திருட்டுப் போயிருந்தது.

இது குறித்து துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us