புகையிலை பொருட்கள் பதுக்கியவர்கள் கைது
சூலூர் அடுத்த இருகூர் புது காலனியில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 125 கிலோ புகையிலை பொருட்களை நேற்று முன் தினம் போலீசார் பறிமுதல் செய்து, ரவி, 58, வில்லியம் தங்கராஜ், 43 ஆகிய இருவரை கைது செய்தனர். ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், காங்கயம் பாளையம் செக்போஸ்ட் அருகில் சோதனை நடத்தியதில், மேலும், 205 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கின. அவற்றை பதுக்கிய மீரா ஹூசைன், 33, கோகுல் நாதன், 20 ஆகிய இருவரையும் கைது செய்து, கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. இது குறித்து, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட கண்ணன்,46, பெருமாள், 60, சங்கர் கணேஷ்,43, வடிவேல், 46, பால்ராஜ், 64, ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து, 48 ஆயிரத்து, 800 ரூபாய் மற்றும் மொபைல் போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.