கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள்
காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் காரமடை அன்னை வேளாங்கண்ணி நகரில் மரக்கடை உரிமையாளரின் வீட்டில், நேற்று முன் தினம் சுமார் 25 பவுன் தங்க நகை திருடு போனது. அதே போல் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையில் உள்ள வேறு 2 வீடுகளில் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு மேல் கொள்ளை போனது.
இச்சம்பவங்கள் குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.----
கொலை மிரட்டல் விடுத்த மூவருக்கு சிறை
சூலூர் அடுத்த கலங்கல் தென்றல் நகரை சேர்ந்தவர் மங்கா, 47. இவரது மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, சின்னதுரை. இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வைரமுத்துவிடம் ஆறுபேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்து கொண்டிருந்தது.
சத்தம் கேட்டு, சின்னதுரை வெளியில் சென்று பார்த்துள்ளார். அக்கும்பல் சின்னதுரையையும் திட்டி தாக்கி உள்ளனர். தடுக்க வந்த கிருஷ்ணமூர்த்தி, மங்காவையும் தாக்கியுள்ளனர். தட்டி கேட்ட மங்காவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் விடுத்த கும்பலை சேர்ந்த தர்மபுரியை சேர்ந்த பாபு, 25, மதன்குமார், 24, விஜய், 25, ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள தினேஷ், சதீஷ், அஜித், சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

