
228 கிலோ குட்கா பறிமுதல் -
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகில், தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 228 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிகா பாரதி, 30 என்பவரை கைது செய்தனர். காரையும், குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணைக்குப் பின், பிகா பாரதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வடமாநில இளைஞர்களிடம் விசாரணை
காரமடை தோலம்பாளையம் சாலையில் 3 வடமாநில இளைஞர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களின் செயல்கள் சந்தேகம்படும்படி இருந்ததால், அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், அவர்களை பிடித்து ஆட்டோ வாயிலாக காரமடை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
பின் அவர்களிடம் எங்கு இருந்து வந்தார்கள், எங்கு பணிபுரிகிறார்கள் என விசாரித்தனர். மேலும், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தனர். இதையடுத்து அவர்களை விடுவித்தனர்.