ரயிலில் அடிபட்டு வியாபாரி பலி
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் குமார், 40. இவருக்கு திருமணமாகி மனைவியும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அண்மையில் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இவர் மன வேதனையில் இருந்துள்ளார். இதனிடையே, எம்.ஜி.ஆர்., நகர் ரயில்வே பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க குமார் முற்பட்டார். அப்போது, சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியது.
இதில் குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.----
ஒர்க் ஷாப் தொழிலாளி தற்கொலை
ஓரைக்கால்பாளையத்தைச் சேர்ந்தவர் சார்லஸ், 33. ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சார்லஸின் பெற்றோர், சார்லஸை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று தூக்கு போட்டு சார்லஸ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.