முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, பாரி நகரில் வசிப்பவர் விஜயகுமார், 46. முன்னாள் ராணுவ வீரர். இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதன்மை செக்யூரிட்டி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த இரண்டே முக்கால் பவுன் எடையுள்ள கம்மல், வளையல் ஆகியன திருட்டுப் போனது தெரிய வந்தது. சம்பவம் குறித்து தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தொழிலாளி பலி
கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதா, 39. இவர் தோலம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராதா வழக்கம் போல் பணிக்கு சென்றார். பணியின் இடையே உணவு அருந்திவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-----