தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் செய்திகள்

 கிரைம் செய்திகள்

 கிரைம் செய்திகள்


ADDED : மார் 11, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பஸ் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு காரமடை அருகே சேரன் நகர் உள்ளது. நேற்று முன் தினம் இப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், அரசு பஸ் மீது கார் மோதியது. காரை பெள்ளாதி பகுதியை சேர்ந்த அஜய்குமார், 29, ஓட்டி வந்தார். காரில் இவரது தந்தை சங்கர், 60, என்பவரும் பயணித்தார்.

இதனிடையே கார் மோதிய அதிர்ச்சியில் சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்த விபத்தில் அஜய்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்பு காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் எல்லையில் கட்டாஞ்சி மலை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் சுமார் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடலை அழுகிய நிலையில் மீட்ட காரமடை போலீசார், இதுகுறித்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே, இறந்தவர் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், மன நிலை சரியில்லாதவர் எனவும் தெரியவந்தது. இவரை காணவில்லை என இவரது தந்தை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்த நிலையில், மகனின் சடலம் மலை அடிவாரத்தில் மீட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, போலீசார் கூறுகையில், மனநிலை சரியில்லாத இளைஞர் வீட்டில் இருந்து வெளியேறி வழித்தவறி கட்டாஞ்சி மலை அடிவாரம் வந்துள்ளார். சுமார் 2 நாட்களாக அவர் உணவு எதுவும் உட்கொள்ளாமல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், மயக்கம் அடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us