ADDED : மார் 18, 2026 04:32 AM
கள் விற்ற விவசாயி கைது காரே கவுண்டன் பாளையம் பகுதியில் சில தோட்டங்களில் தடை செய்யப்பட்ட கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அன்னூர் போலீசார், அப்பகுதி தோட்டங்களில் சோதனை நடத்தினர். இதில் பிரகாஷ், 36. என்பவரது தோட்டத்தில் 15 லிட்டர் கள் இறக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அன்னூர் போலீசார் பிரகாசை கைது செய்து, 15 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது அன்னூர் போலீஸ் எஸ்.ஐ., அப்துல் முத்தலிப் தலைமையில் போலீசார் நேற்று கணேசபுரம் அருகே கடத்தூர் பிரிவில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு உள்ள நாட்டுக்கோழி விருந்து ஹோட்டல் பின்புறம் மது விற்பது தெரிய வந்தது. அங்கு மது விற்றுக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த நல்லுசாமி, 45. என்பவர் பிடிபட்டார். அவரை கைது செய்து அவர் வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் மோதி தொழிலாளி பலி வேலூர் மாவட்டம், எல்.ஜி. புதூரை சேர்ந்த முருகேசன், விஜயகுமார், 22. தனியார் நிறுவன தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு கரியாம்பாளையத்தில் மோட்டார் பைக்கில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அதே ரோட்டில், எதிர் திசையில் வந்த பைக், விஜயகுமார் பைக் மீது மோதியது. இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து விஜயகுமாரின் மனைவி நஸ்ரின் பானு, 21. கொடுத்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
