தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்

 கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்

 கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்


ADDED : ஆக 13, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா சாக்லேட் வாங்கியவர் கைது அன்னூர் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார் மேட்டுப்பாளையம் சாலையில், ஜெ.ஜெ. நகர் அருகே ரோந்து சென்றனர்.

இதில் ஒருவரை சோதனை செய்தபோது, அவர் பீகார் மாநிலம், சித்தாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் ராம், 23. எனவும், தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்து, 600 கிராம் எடையுள்ள, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 120 கஞ்சா சாக்லெட்டுகள் சிக்கின. விசாரணையில், தனியார் செயலி (ஆப்) மூலம் ஆர்டர் செய்து கொரியர் வாயிலாக சாக்லெட்டுகளை பெற்றதாகவும், வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக, 4.5 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் கஞ்சா வியாபாரி பிரசாத்தை,24, போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை எஸ்.பி., பவன் ரெட்டி பரிந்துரை செய்தார். இதையடுத்து கஞ்சா வியாபாரி பிரசாத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us