தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மில் தொழிலாளி மீது போக்சோ வழக்கு

மில் தொழிலாளி மீது போக்சோ வழக்கு

மில் தொழிலாளி மீது போக்சோ வழக்கு


UPDATED : செப் 02, 2026 06:32 PM

ADDED : செப் 02, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 06:32 PM ADDED : செப் 02, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூரில் உள்ள ஒரு மில்லில், அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் தங்கி வேலை செய்து வந்தனர். அவர்களது, 17 வயது மகளும் மில்லில் வேலை செய்து வந்தார். அதே மில்லில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ், 19 என்ற வாலிபரும் வேலை செய்து வந்துள்ளார். அவர், 17 வயது சிறுமியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன., மாதம் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்து பார்க்கையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. மருத்துவமனையில் இருந்து சூலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று, சஞ்சீவ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இருசக்கர வாகனங்கள் மீது டெம்போ மோதல்

பெரியநாயக்கன்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே பேக்கரி உள்ளது. பேக்கரியின் உள்புறம் அமர்ந்து பலர் டீ அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்,56, டெம்போவை வேகமாக ஓட்டி வந்து, கட்டுப்படுத்த முடியாமல் பேக்கரி முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களின் மீது மோதினார். இருசக்கர வாகனங்களில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் இல்லை. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கவுண்டம்பாளையத்தில் மொபட் திருட்டு

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட் திருட்டு போனது.

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சீதா,38. இவர் கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் சி 4 பிளாக் முன்புறம் தனது மொபட் நிறுத்திவிட்டு சென்றார். காலையில் வந்து பார்க்கும் போது காணவில்லை. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us