தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டீக்கு ஒரு ‘பஞ்சாயத்து’ நடக்குது!

டீக்கு ஒரு ‘பஞ்சாயத்து’ நடக்குது!

டீக்கு ஒரு ‘பஞ்சாயத்து’ நடக்குது!


ADDED : செப் 02, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உக்கடம்: உக்கடம் டெர்மினல்–2 அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இரவு பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சுங்கம் கிளை டிப்போவில் இருந்து பிளாஸ்க்கில் டீ கொண்டு வரப்படுகிறது. பிளாஸ்க் சூடு தாங்குவதில்லை; டீ ஆறிப்போய் விடுகிறது. 20க்கும் மேற்பட்டோர் டீ சாப்பிடுகின்றனர். 5 டம்ளர்களே கொடுக்கின்றனர். 5 பேர் குடித்த பின், அவற்றை கழுவி விட்டு, மற்றவர்கள் குடிக்க வேண்டியுள்ளது. அது வரை மற்றவர்கள் காத்திருக்கின்றனர்.

கிளை நிர்வாகிகள் கவனத்துக்கு ஊழியர்கள் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை அலுவலகத்தினர் கவனத்தை ஈர்க்க, கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) தொழிற்சங்க அறிவிப்பு பலகையில், வேதனையை பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us