UPDATED : ஜூலை 26, 2026 11:22 PM
ADDED : ஜூலை 26, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
போத்தனுார்: கோணவாய்க்கால்பாளையத்திலுள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர், குனியமுத்தூர், நரசிம்மபுரத்திலுள்ள காமராஜர் வீதியை சேர்ந்த மணிகண்டன், 47.
கடந்த 24 இரவு மதுக்கடையை சாத்திவிட்டு, அதன் முன் நின்றிருந்தார். அங்கு வந்த ஒருவர், மது கேட்டபோது, கடை மூடிவிட்டதாக கூறியுள்ளார். அந்நபர் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். ஆயிரம் ரூபாயை கொடுத்த மணிகண்டன் சத்தமிடவும், உடன் வேலை செய்வோர் ஓடி வந்தனர். அவர்களையும் மிரட்டிய அந்நபர் அங்கிருந்து தப்பினார். மணிகண்டன் புகாரில் போத்தனூர் போலீசார் விசாரித்து, புலியகுளம், ஏரிமேடு, அம்மன்குளத்தை சேர்ந்த, பிரசாந்த், 23 என்பவரை கைது செய்தனர்.
