/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; பெண் போலீசாருக்கு பயிற்சி துவக்கம்

ADDED : ஜூலை 20, 2025 10:58 PM

கோவை; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி, கோவை பி.ஆர்.எஸ்., வளாகத்தில் நடந்தது.
மாநில போலீஸ் பயிற்சி தலைமையகத்தின் கீழ் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி, 15 பணியிடை பயிற்சி மையங்கள் மூலம் நடத்தப்பட்டது. சென்னை தாம்பரம், ஆவடி, போலீஸ் கமிஷனரகம் மற்றும் தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி ஆகிய போலீஸ் பயிற்சி பள்ளிகளில், 691 பெண் போலீசார் என, மொத்தம், 784 பெண் போலீசாருக்கு, பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிரான குற்றங்கள், அவற்றை கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை வகைப்படுத்துதல், போக்சோ மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை, வேண்டாதவை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் அறிவுறுத்தப்பட்டன.
பயிற்சி முடிவில், போலீஸ் பயிற்சி கையேடு உள்ளிட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன.