/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு-அவிநாசி திட்ட குழாயை சேதப்படுத்தினால் குற்ற நடவடிக்கை
/
அத்திக்கடவு-அவிநாசி திட்ட குழாயை சேதப்படுத்தினால் குற்ற நடவடிக்கை
அத்திக்கடவு-அவிநாசி திட்ட குழாயை சேதப்படுத்தினால் குற்ற நடவடிக்கை
அத்திக்கடவு-அவிநாசி திட்ட குழாயை சேதப்படுத்தினால் குற்ற நடவடிக்கை
ADDED : நவ 28, 2025 03:10 AM
அன்னுார்: 'அத்திக்கடவுக் குழாயை சேதப்படுத்துவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, திட்ட பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீர் பாதுகாப்பு குழு கூட்டம் கதவு கரையில் நடந்தது. அத்திக்கடவு திட்ட உதவி செயற்பொறியாளர் பிரபா பேசுகையில், குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பயனாளிகள் பாதுகாக்க வேண்டும். சிலர் தெரிந்தோ தெரியாமலோ போல்ட் நட்டுகளை கழற்றி விடுவதால் நீரேற்று நிலையத்தில் மின்மோட்டாரை நிறுத்த வேண்டி உள்ளது. அடுத்து உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. இது குற்றச் செயலாகும், என்றார்.
எல் அண்ட் டி நிறுவன திட்ட மேலாளர் பரத், பொறியாளர் கதிர் ஆகியோர் பேசுகையில், 'அத்திக்கடவு திட்டத்தில் 850 கி.மீ., தூரம் பணி முழுமையாக முடிந்துள்ளது. 1,500 முறை குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. 80 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மின்தடை ஏற்பட்டாலும், அதன் பிறகு பல மணி நேரம் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் திட்டக் கருவிகள் திருட்டுப் போகின்றன. பயனாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். பொரு ட்கள் திருட்டு போகாமல் பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.
அத்திக்கடவு திட்ட வால்வுகள், குழாய்கள் ஆகியவற்றை திருடுவோர் சேதப்படுத்துவோர் மற்றும் சட்டவிரோதமாக கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், நடராஜன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

