/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 மாத குழந்தை காய்ச்சலில் உயிரிழப்பு
/
8 மாத குழந்தை காய்ச்சலில் உயிரிழப்பு
ADDED : நவ 28, 2025 03:11 AM
தொண்டாமுத்துார்: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு,23. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மானசா,20 என்ற மனைவியும், யோகேஸ்வரன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கடத்த மூன்று வாரங்களுக்கு முன்பு, சந்துரு தனது குடும்பத்துடன், குப்பனூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்தார். கடந்த ஒரு வாரமாக, குழந்தை யோகேஸ்வரனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக, கரடிமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இதனையடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

