/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 வயதில் சுகர்; 40 வயதில் ஹார்ட்அட்டாக்: உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
/
20 வயதில் சுகர்; 40 வயதில் ஹார்ட்அட்டாக்: உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
20 வயதில் சுகர்; 40 வயதில் ஹார்ட்அட்டாக்: உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
20 வயதில் சுகர்; 40 வயதில் ஹார்ட்அட்டாக்: உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
ADDED : நவ 28, 2025 03:11 AM
அன்னுார்: 'தவறான உணவுப் பழக்கத்தால், 20 வயதில் சுகரும், 40 வயதில் மாரடைப்பும் வருகிறது,' என, உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.
பிள்ளையப்பம்பாளையத்தில் உள்ள கிராமப்புற பெண்கள் தொழில்நுட்ப பூங்காவில், சென்னையில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகத்தின் நிதி உதவியுடன் 300 பேருக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற 150 பேருக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளை செயலாளர் யசோதா தேவி வரவேற்றார். பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலை வகித்தார்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா பேசுகையில், தற்போது பேக்கிங் செய்யப்பட்ட உணவு உட்கொள்வது அதிகரித்து விட்டது. எண்ணை, உப்பு, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை ஆர்வமாக உண்கின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. 20 வயதில் சுகரும், 40 வயதில் ஹார்ட் அட்டாக்கும் ஏற்படுகிறது. மிகக் குறைந்த வயதில் பெண்கள் பூப்பெய்கின்றனர். தவறான உணவுப் பழக்கத்தால் தொற்றா நோய் அதிகரித்து வருகிறது.
சத்தான சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும். உணவுத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்கள் உணவு பாதுகாப்புத் துறையில் தாங்கள் துவங்க உள்ள தொழிலுக்கு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.
கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், இணை பேராசிரியை அகிலாண்டேஸ் வரி ஆகியோர் பேசினர்.

