/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிரிம்சன்' கூடைப்பந்து போட்டி
/
'கிரிம்சன்' கூடைப்பந்து போட்டி
ADDED : ஆக 04, 2025 08:11 PM

கோவை; பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் ராம.அரங்கநாதன் நினைவு கோப்பைக்கான, 40வது 'கிரிம்சன்' கூடைப்பந்து போட்டி ஆறு நாட்கள் நடந்தன. இதில், 13, 14, 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் என, மூன்று பிரிவுகளில், 49 பள்ளிகளின் அணிகள் விளையாடின.
முதல் மூன்று நாள் போட்டிகள், நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து அரங்கிலும், காலிறுதி முதலான போட்டிகள், பெர்க்ஸ் பள்ளி மைதானத்திலும் நடந்தன.
13 வயதுக்குட்பட்ட வீரர்கள் பிரிவில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., 'ஏ' அணி, 56-23 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப் பள்ளி அணியை வென்றது.
14 வயதுக்குட்பட்ட வீரர் கள் பிரிவில், பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி அணி, 74-62 என்ற புள்ளிகளில் பெர்க்ஸ் பள்ளி அணியை வென்றது.
19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சபர்பன் மேல்நிலைப்பள்ளி அணி, 92-74 என்ற புள்ளிகளில் பெர்க்ஸ் பள்ளி அணியை வென்றது.
பள்ளியின் தாளாளர் கல்பனா, முதல்வர் பிரியா, துணை முதல்வர் இந்திரா ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், மத்திய ரயில்வே துறையில் பணிபுரிபவருமான முகுந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.